2-ம் கட்ட உள்கட்சி தேர்தல்: அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

2-ம் கட்ட தேர்தல் அமைப்பு ரீதியாக சென்னை உள்பட 40 மாவட்டங்களுக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கிளை கழகம் முதல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வட்ட கழக நிர்வாகிகள் வரையிலான அடுத்த கட்ட தேர்தல் கடந்த 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற்றது.

இதன் 2-ம் கட்ட தேர்தல் அமைப்பு ரீதியாக சென்னை உள்பட 40 மாவட்டங்களுக்கு வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் வந்து ஆலோசனை நடத்தினார். இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com