வரும் 5-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
வரும் 5-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com