இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்  வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: - 

நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்   அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு  25 சதவீதம் இட ஓதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற  20 -ந் தேதி முதல் மே மாதம் 18 ந் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை இணையதளம் வழியில் பதிவேற்றம் செய்யலாம். அல்லது அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் அளித்து இணை வளியில் பதிவேற்றம் செய்து அதற்கான  ஒப்புகை சீட்டை பெற்று கொள்ளலாம்.  

பெற்றோர்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளியில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. வகுப்பில் மாணவர்    சேர்க்கைக்கு  விண்ணப்பிக்காலம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com