திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் - தினகரன்

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்கள் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் - தினகரன்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘திரு. கருணாநிதியின் உடல் நலனுக்காக நான் பிராத்திக்கிறேன். விரைவில் அவர் பூரணகுணமடைவார் என நம்புகிறேன், அவரது பரந்த அரசியல் அனுபவம் தமிழ்நாடு மற்றும் தேசிய மக்களின் நலனுக்கு பயனளிப்பதாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com