அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 497 பேர் நீக்கம்

அ.திமு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 497 பேரை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 497 பேர் நீக்கம்
Published on

சென்னை:

தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நீக்கி வருகிறார்கள்.

இன்று 497 பேரை நீக்கி இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. சரோஜா ஆகியோர் நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

சேலம் புறநகரில் மட்டும் இரண்டு முன்னாள் எம். எல்.ஏ.க்கள் உள்பட 100 பேர் நீகக்கப்பட்டுள்ளனர்.

மத்திய காஞ்சீபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, மதுரை மாநகர், சிவகங்கை, நெல்லை, மாநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இருந்துதான் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் இருந்து மொத்தம் 390 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com