தொப்பி சின்னம் யாருக்கு என நீங்கள் முடிவு செய்ய முடியுமா? முதல்வர் தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற்று வரும் நிலையில், தொப்பி சின்னத்தை யாருக்கு என்பது தொடர்பான வாதம் நடைபெற்று வருகிறது.
Published on

புதுடெல்லி:

முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் தரப்பு தங்களது வாதத்தில் கூறியது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் டி.டி.வி தினகரன் அணி அரசியல் கட்சி அல்ல இதனால், அவர் சுயேட்சை வேட்பாளராக கருதப்படுவார். அந்த அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறியது.

முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.கே. நகரில் தொப்பி சின்னத்தை பலர் கேட்கும் பட்சத்தில் ஒருவருக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று வாதிட்டனர். இதனையடுத்து, தொப்பி சின்னத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியுமா? என்று முதல்வர் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொப்பி சின்னத்தை ஒத்துவது தொடர்பாக மாலை 4 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com