கொரோனா வைரஸ் அறிகுறி- தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்த வாலிபர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக வாலிபர் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

தொடுபுழா:

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் லினோ (வயது 25). இவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தபோது, லினோவின் தந்தை இறந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்த லினோ, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் தவித்தார்.

இதற்கிடையே ரத்த பரிசோதனையில் லினோவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் சோகத்தில் இருந்த லினோ, நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com