ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்

ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 3 பேருக்கு ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனி அறையில் வைக்கப்பட்டுள்ள அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல்
டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல்
Published on

ஹாங்காங்கில் இருந்து டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் ஜப்பான் துறைமுகத்துக்கு சென்றது. அந்த கப்பலில் 3711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக சொகுசு கப்பலை நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் கப்பலுக்கு சென்று பயணிகளை சோதனை செய்தனர். இதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் 28 பேர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சொகுசு கப்பலில் 6 இந்தியர்கள் உள்ளனர். அவர்களிடம் நடந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

கப்பலில் இருந்து வெளியேற முடியாததால் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com