அமெரிக்காவில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி
Published on

வாஷிங்டன்: 

உலகம் முழுவதும் 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 245,080 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில்  115,242 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  பலியானோர் எண்ணிக்கை  13,915- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  ஸ்பெயினில் 112,065 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  10,348 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com