சென்னையில் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

நாளை தளர்வின்றி ஊரடங்கு என்பதால் சென்னை காவல் எல்லை பகுதிகளில் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போலீசார் வாகன சோதனை (கோப்புப்படம்)
போலீசார் வாகன சோதனை (கோப்புப்படம்)
Published on

சென்னை:

நாளை தளர்வின்றி ஊரடங்கு என்பதால் சென்னை காவல் எல்லை பகுதிகளில் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வேறு வாகனங்கள் உத்தரவை மீறி வந்தால் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்யப்படும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு நாளை அனுமதி உண்டு.

தெருக்களில் தனிமனித இடைவெளியின்றி கூட்டமாக நிற்பதையும் தவிர்க்க வேண்டும்

சந்தேகம் இருப்பின் 044-23452330, 23452362, 90031 30103-ல் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com