காதர் மொய்தீனுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்
Published on

திருச்சி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி தனியார் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் காதர் மொய்தீன் நலமுடன் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com