தேனியில் இன்று 46 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனியில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
Published on

தேனி:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் ஏற்கனவே 14,277 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 13,562 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com