மதுரை பரவை காய்கறி மார்க்கெட்டில் 25 பேருக்கு கொரோனா

மதுரை பரவை காய்கறி மார்க்கெட்டில் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on: 

மதுரை மாவட்டம் பரவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகள் தென்மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு செல்கின்றன. லோடுமேன்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் என தினமும் இரண்டாயிரம் பேர் பரவை மார்க்கெட்டில் பணியாற்றி வந்தனர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் போன்றே பரவை மார்க்கெட்டிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டு நான்கு வெவ்வேறு இடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பரவை காய்கறி மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பரவை காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றியவர்கள் விவரம் பெறப்பட்டு 1009 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பேருக்கு தீவிர தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் பரவை மார்க்கெட்டில் பணியாற்றியவர்கள் உடன் அடுத்தடுத்து தொடர்பில் இருந்தவர்கள் என 2,000 பேர் கண்காணிக்கப்பட உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com