அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார்.
டாக்டர் ராமதாசை நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி
டாக்டர் ராமதாசை நலம் விசாரித்த முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக இருந்து வரும்டாக்டர் ராமதாஸ், காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com