

சென்னை:
வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 23.12.2019 முதல் 22.01.2020 முடிய பெறப்பட்டன.
அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.
ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2020-ம் ஆண்டிற்கான இறுதிப்பட்டியல் மற்றும் துணைப்பட்டியல் தயார் செய்யப்பட்டன.
இதனை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் வெளியிட்டார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
19 லட்சத்து 43 ஆயிரத்து 556 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 2 ஆயிரத்து 223 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 1013 பேர் இதர பிரிவினர் உள்ளனர்.
அதிக வாக்காளர் கொண்ட பெரிய தொகுதியாக வேளச்சேரி உள்ளது. குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதியாக துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களது எண்ணிக்கை கடந்த 23-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட 58,119 அதிகமாகும்.
இந்த பட்டியலில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எண்ணிக்கை 19,688 ஆகும்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தி.மு.க. பகுதி செயலாளர் மதன்மோகன், மருதுகணேஷ் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் குமரவேல் பாண்டியன், பெருமாள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
கும்மிடிப்பூண்டி- ஆண்கள்- 134824, பெண்கள்-140728, இதரர்- 35 மொத்தம்-275587.
பொன்னேரி-ஆண்கள்- 128423, பெண்கள்-133677, இதரர்- 64 மொத்தம்-262164.
திருத்தணி- ஆண்கள்- 139860, பெண்கள்-145162, இதரர்- 27 மொத்தம்-285049.
திருவள்ளூர்- ஆண்கள்- 130809, பெண்கள்-137310, இதரர்- 23 மொத்தம்-268142.
பூந்தமல்லி (தனி)- ஆண்கள்- 170684, பெண்கள்-175560, இதரர்- 49 மொத்தம்-346293.
ஆவடி-ஆண்கள்- 211969, பெண்கள்-213834, இதரர்-90, மொத்தம்- 425893.
மதுரவாயல்-ஆண்கள்- 215421, பெண்கள்-211264, இதரர்-128, மொத்தம்- 426813.
அம்பத்தூர்-ஆண்கள்- 185944, பெண்கள்-185170, இதரர்-94, மொத்தம்- 436403.
மாதவரம்-ஆண்கள்- 217517, பெண்கள்-218790, இதரர்-96, மொத்தம்- 436403.
திருவெற்றியூர்- ஆண்கள்- 145418, பெண்கள்-148792, இதரர்-140, மொத்தம்- 294350.
மொத்தம் ஆண்கள்-1680869, பெண்கள்-1710287, இதரர்-746, மொத்த வாக்காளர்கள்-3391902.