GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

வெள்ளி விலை குறைந்துள்ளது.
Gold
Published on: 

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தில் இருந்து குறையவில்லை. ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான அளவிலேயே விற்கப்பட்டது.

இப்படியாக பயணித்த தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை, அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

கடந்த மாதம் இறுதியில் இருந்து தங்கம் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. இதற்கு பல காரணங்கள் பல்வேறு தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும், அமெரிக்காவின் இடைக்காலத்தேர்தல் பெரும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

மீண்டும் ஏறுமுகம்

அந்த கணிப்பின்படியே, அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே விலை ஏறத்தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தேர்தல் முடிந்து முடிவு வெளியானதும், விலை 'டாப் கியரில்' மீண்டும் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் அதிரடி உயர்வு இருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2,280-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 385-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 80-க்கும் விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்திருக்கிறது.

தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் இன்று காலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.1,07,080-க்கும், ஒரு கிராம் ரூ.13,385-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.245 குறைந்து ரூ.13,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

5-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,080

4-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200

1-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

5-11-2026- ஒரு கிராம் ரூ.210

4-11-2026- ஒரு கிராம் ரூ.210

3-11-2026- ஒரு கிராம் ரூ.200

2-11-2026- ஒரு கிராம் ரூ.200

1-11-2026- ஒரு கிராம் ரூ.200

X