

தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை தொடர்ந்து குறைந்து வந்த சூழலில், அதற்கு பிறகு ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 9-ந்தேதி அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகித வரம்பை உயர்த்த வாய்ப்பு அதிகம் இருப்பதால், தங்கம் விலை அப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு உலக சந்தைகளில் நிலவி வருகிறது.
இது சந்தைகளில் பரபரப்பாக பேசியதன் விளைவால் தங்கம் விலை முன்கூட்டியே சரியத் தொடங்கியது. விலை மேலும் சரியும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி தங்கம் செல்கிறது. நேற்று முன்தினம் விலை உயர்ந்த சூழலில், நேற்றும் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிலும் இருமுறை ஏற்றம் கண்டது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம் சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது.
பொதுவாக இந்தியாவில், காலை, மாலை என இருவேளைகளில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படும். இதில் பெரும்பாலும் காலை நிலவர விலை மாற்றமே அதிகம் இருக்கும். காலை விலை நிலவரம் அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளின் நிலவரத்தை பொறுத்தும், மாலை விலை நிலவரம் ஐரோப்பிய சந்தைகள், இந்தியாவின் வர்த்தகத்தில் ஏற்படும் திடீர் ஏற்ற, இறக்கங்களை பொறுத்தும் மாற்றி அமைக்கப்படும்.
அந்த வகையில் நேற்று மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. ஆக மொத்தம் கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 170 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
27-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,160
26-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320
25-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,360
24-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,720
23-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
27-11-2026- ஒரு கிராம் ரூ.170
26-11-2026- ஒரு கிராம் ரூ.165
25-11-2026- ஒரு கிராம் ரூ.165
24-11-2026- ஒரு கிராம் ரூ.175
23-11-2026- ஒரு கிராம் ரூ.175