GOLD PRICE TODAY: உயரத் தொடங்கிய தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
Gold
Published on: 

தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து சரிந்து கடந்த 21-ந்தேதி ரூ.92 ஆயிரத்துக்கு கீழும் சென்றது. இப்படியாக மேலும் விலை குறைந்து ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் வந்துவி டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நிலைமை அப்படியே மாறியது. என்ன வேகத்தில் இறங்கியதோ? அதே வேகத்தில் ஏற்றம் காணத் தொடங்கியது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.920 அதிகரித்தது. 23, 24-ந்தேதிகளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்தது. இனி குறையுமா? மீண்டும் ஏறுமா? என சந்தை நிலவரத்தையே ஒரு குழப்பத் துக்கு தங்கம் விலை நிலவரம் தள்ளிவிட்டிருக்கிறது.

சவரனுக்கு ரூ.2,360 குறைவு

விலை குறைந்து வந்து, இடையில் 2 நாட்கள் ஏற்றம் கண்ட சூழலில், மீண்டும் நேற்று இறங்குமுகத்தை நோக்கி சென்றது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 715-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

நேற்று கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 420-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 23, 24-ந்தேதிகளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் ஏற்றம் கண்டு, நேற்று ஒரே நாளில் ரூ.2,360 குறைந்துவிட்டது. மீண்டும் விலை சரிவுக்கு அமெரிக்காவின் நிலவரம்தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது டாலர் மதிப்பு வலுவடைந்தது. பணவீக்க குறியீடு தரவுகள் வெளியாவது. தங்கத்தின் மேல் விற்பனை அழுத்தம் போன்றவை ஆகும்.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

25-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,360

24-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,720

23-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

22-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720

21-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

25-11-2026- ஒரு கிராம் ரூ.165

24-11-2026- ஒரு கிராம் ரூ.175

23-11-2026- ஒரு கிராம் ரூ.175

22-11-2026- ஒரு கிராம் ரூ.175

21-11-2026- ஒரு கிராம் ரூ.175

X