GOLD PRICE TODAY: தங்கப் பிரியர்களுக்கு சரவெடி கொண்டாட்டம்... சவரனுக்கு ரூ.3760 சரிந்த தங்கம் விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.
Gold
Published on: 
Summary

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை

தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்ற-இறக்கம் காணப்பட்ட நிலையில், கடந்த 10-ந்தேதியில் இருந்து விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு (2025) இறுதியில் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டிய பிறகு, ராக்கெட் வேகத்தில் ஏறத் தொடங்கியது.

தினமும் புதிய உச்சம் என்ற அடிப்படையில் எகிறி, கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்திருந்தது.

தங்கம் விலை ஏற்றம்

தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை பின்னர் சற்று சரிவை சந்தித்தது. விலை மளமளவென் குறைந்து வந்து, ரூ.1 லட்சத்துக்கும். ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் இடையே ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே நீடித்தது.

கடந்த 10 நாட்களில்...

தற்போது விலை இறங்குமுகத்தை நோக்கி செல்கிறது. கடந்த 10-ந்தேதி குறையத் தொடங்கிய தங்கம் விலை நேற்று வரையிலும் சறுக்கலை சந்தித்தபடியே இருக்கிறது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 215-க்கும், ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 720-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.235-ம், பவுனுக்கு ரூ.1,880-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 980-க்கும், ஒரு பவுன் ரூ.95 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

கடந்த 3 நாட்களாக பெருமளவில் விலை குறைவதை பார்க்க முடிகிறது. கடந்த 17-ந்தேதி பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. நேற்று முன்தினம் ரூ.2.040-ம் சரிந்து ரூ.98 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று ரூ.1,880-ம் குறைந்து ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும், கிராமுக்கு ரூ.470 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,510-க்கும் விற்பனையாகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.13 ஆயிரத்து 960-ம் குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

19-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,840

18-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.97,720

17-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,760

16-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,320

15-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

19-11-2026- ஒரு கிராம் ரூ.180

18-11-2026- ஒரு கிராம் ரூ.185

17-11-2026- ஒரு கிராம் ரூ.190

16-11-2026- ஒரு கிராம் ரூ.190

15-11-2026- ஒரு கிராம் ரூ.195

X