தங்கம் விலை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயர வாய்ப்பு

3 சவரன் தங்கம் வாங்கியவர்கள் தற்போது குறைந்துள்ள விலையால் கூடுதலாக ஒரு பவுன் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாதம் முழுவதும் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
தங்கம்
Published on: 
Summary

தங்கம் விலை குறைவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் விலை உயர வாய்ப்பு இருப்பதால், தற்போதைய குறைந்த விலையை பயன்படுத்தி நகை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும் என வியாபாரிகள் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை தினமும் ஆயிரக்கணக்கில் குறைந்து வருவது பொதுமக்களிடம் நகை வாங்கும் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் தங்கம் வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சி

இதனிடையே, தங்கத்தின் விலை குறைந்து வருவது குறித்து தமிழ்நாடு தங்கம் வெள்ளி வைர வியாபாரிகள் சங்க மாநில தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

தங்கத்தின் விலை இன்னும் கொஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது. விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

3 சவரன் தங்கம் வாங்கியவர்கள் தற்போது குறைந்துள்ள விலையால் கூடுதலாக ஒரு பவுன் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாதம் முழுவதும் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

உயர வாய்ப்பு

டிசம்பர் முதல் வாரத்தில் பெடரேஷன் அமைப்பு கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அதில் வட்டி விகிதம் மாற்றம் ஆகலாம். எப்படி மாற்றம் ஆகிறது என்பதைப் பொறுத்து தங்கத்தின் விலை கூடவோ அல்லது குறையவோ செய்யும்.

எனவே டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து தங்கத்தின் விலை உயரலாம். இதே நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X