GOLD PRICE TODAY : காலையை தொடர்ந்து மாலையிலும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

காலையில் ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து, 11,600 ரூபாய்க்கு விற்பனையானது.
gold
Published on: 
Summary

தங்கம் விலை காலையில் உயர்ந்ததைத் தொடர்ந்து மாலையிலும் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,770-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.94,160-க்கும் விற்பனையாகிறது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற பேச்சு எழுந்ததில் இருந்து தங்கம் விலை சரிவை சந்தித்தது. கடந்த 10-ம் தேதியில் இருந்து விலை மளமளவென குறைந்து வந்ததைப் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் 10-ந்தேதியில் இருந்து கடந்த 21-ந்தேதி வரை விலை குறைந்து வந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,490-ம், சவரனுக்கு ரூ.11 ஆயிரத்து 920-ம் குறைந்திருந்தது. அதன்பின்னர், 23, 24-ம் தேதிகளில் விலை உயர்ந்து, 25-ம் தேதி மீண்டும் குறைந்தது. மேலும் குறையும் என எதிர்பார்த்த சூழலில், நேற்று விலை உயர்ந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.

இப்படியாக தங்கம் விலை போக்கு காட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 120-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும். ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் உயர்ந்திருக்கிறது ஏன்? அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை எதிர்பார்த்தபடி குறையுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

சற்றே உயர்ந்த தங்கம் விலை

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 170 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை

இந்நிலையில், இன்று மாலை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.11,770-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.94,160-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கும், பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

X