GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை:

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து விற்பனையாது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,155 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120

11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

13-07-2025- ஒரு கிராம் ரூ.125

12-07-2025- ஒரு கிராம் ரூ.125

11-07-2025- ஒரு கிராம் ரூ.121

10-07-2025- ஒரு கிராம் ரூ.120

09-07-2025- ஒரு கிராம் ரூ.120

X

Maalai Malar
www.maalaimalar.com