GOLD PRICE TODAY : வார இறுதி நாளில் சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்

இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று உயர்ந்துள்ளது.
தங்கம்
Published on: 
Summary

கடந்த மாதத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் குறைந்து கொண்டே வந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5.240-ம் உயர்ந்து இருந்தது.

இனியும் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட சூழலில், நேற்று திடீரென்று விலை சரிந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 385-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 80-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.245-ம் சவரனுக்கு ரூ.1,960-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 140-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை நிலவரம்

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 280-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.205-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

6-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,120

5-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,080

4-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

6-11-2026- ஒரு கிராம் ரூ.205

5-11-2026- ஒரு கிராம் ரூ.210

4-11-2026- ஒரு கிராம் ரூ.210

3-11-2026- ஒரு கிராம் ரூ.200

2-11-2026- ஒரு கிராம் ரூ.200

X