

தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று, இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920
02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400
31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960
30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040
03-08-2026- ஒரு கிராம் ரூ.255
02-08-2026- ஒரு கிராம் ரூ.250
01-09-2026- ஒரு கிராம் ரூ.250
31-08-2026- ஒரு கிராம் ரூ.260
30-08-2026- ஒரு கிராம் ரூ.260