புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

புதுவை சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனிடையே தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
புதுவை சட்டசபை
புதுவை சட்டசபை
Published on

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

2-ம் நாளான நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இன்று புதுவை சட்டசபையில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தார்மீக அடிப்படையில் அவர் சபாநாயகராக இருக்கும் தகுதியை இழந்துள்ளார் என கூறினார். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டமன்ற விதிகளின்படிதான் சபை நடத்தப்படுகிறது என்றார்.

இதையடுத்து அன்பழகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேசினர்.

அனைவரும் சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். அங்கும் கடந்த ஆண்டு பட்ஜெட் புத்தகத்தை காட்டி கடந்த 3 ஆண்டாக தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என அன்பழகன் குற்றம் சாட்டினார்.

ஆளும்கட்சி உறுப்பினர்களை பார்த்து உங்களுக்காகவும்தான் போராடுகிறோம். எங்களுடன் வாருங்கள் என்றார். அமைச்சர்களை பார்த்தும் திட்டங்களை சுட்டிக்காட்டி என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை வாசித்துக்கொண்டிருந்தார். எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவை தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து, சபை மாண்பை குலைக்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்படக்கூடாது. அப்படி செயல்பட்டால் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சபை காவலர்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சபையிலிருந்து வெளியேற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com