

லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஹமீர்பூர் சட்டசபை தொகுதிக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட யுவராஜ் சிங் 74,168 வாக்குகள் பெற்றார். அவரை தொடர்ந்து சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட மனோஜ் பிரதாப் 56,397 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்துள்ளார். சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யுவராஜ் சிங் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
இதேபோல், திரிபுரா மாநிலத்தின் பாதர்காட் தொகுதியில் நடைபெற்ற பாஜக வேட்பாளர் மிமீ மஜும்தார் வெற்றி பெற்றுள்ளார். இவர் சிபிஐ (எம்) கட்சியின் வேட்பாளர் புல்தி பிஸ்வாசை விட 5260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.