

சென்னை:
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-
மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.
இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர். ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.
ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது, பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கமலின் அரசியல் வருகை கழகங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும்
இவ்வாறு அவர் பேசினார். #Rajinikanth #BJP