

புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.
இந்நிலையில், வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி, மந்திரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்து உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.