65 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து வங்காள தேசம் திணறல்- 25 ஓவரில் 78-5

வங்காள தேசம் 65 ரன்கள் அடிப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. ஜடேஜா அபாரமாக பந்து வீசினார். #AsiaCup2018 #INDvBAN
65 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து வங்காள தேசம் திணறல்- 25 ஓவரில் 78-5
Published on

லிட்டோன் தாஸ், நஸ்முல் ஹுசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 5-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் நஸ்முல் ஹுசைன் 7 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடக்க விக்கெட்டுக்களை 16 ரன்னுக்குள் இருவரும் வீழ்த்தினார்கள். அதன்பின் ஷாகிப் அல் ஹசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கும்போது ஜடேஜா பந்தில் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கைக்கு எதிராக சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிமை 21 ரன்னிலும், முமகது மிதுனை 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஜடேஜா வெளியேற்ற வங்காள தேசம் 65 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com