ஆர்.கே நகர் வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு நாளை கூடுகிறது

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை முடிவு செய்வதற்காக அ.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழு நாளை காலை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே நகர் வேட்பாளர் தேர்வு: அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு நாளை கூடுகிறது
Published on

 சென்னை:

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க.வின் வேட்பாளரை தேர்வு செய்வதில் அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூத்த தலைவர் மதுசூதனன், பாலகங்கா உள்பட 25 பேர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

இந்நிலையில், அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு நாளை கூடி முடிவெடுத்த பின்னர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்று தஞ்சாவூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆட்சி மன்றக்குழு விரிவுபடுத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் புதிதாக ஆட்சி மன்ற குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com