துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

தி.மு.க. பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜின்காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது.

இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இதற்கிடையே, தி.மு.க. பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜின்காந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.ஆர். பாலுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com