மெர்சல் படத்தை ஆதரித்த பா.ஜனதா நிர்வாகி மீது நடவடிக்கை: கட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை

மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது ‘பேஸ்புக்‘ பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்ட பா.ஜனதா நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெர்சல் படத்தை ஆதரித்த பா.ஜனதா நிர்வாகி மீது நடவடிக்கை: கட்சி கூட்டத்தில் பங்கேற்க தடை
Published on

சென்னை:

நடிகர் விஜய், மெர்சல் படத்தில் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இருப்பதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதாவின் தென் சென்னை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் சித்தார்த் மணி என்பவர் மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது ‘பேஸ்புக்‘ பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருப்பதுடன் மெர்சல் பட ஸ்டில்களையும் வெளியிட்டு, நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன் என்று புகழாரம் சூட்டி இருந்தார்.

இதைப்பார்த்த பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியில் இருந்து கொண்டே பிரதமர் மோடியின் திட்டங்களை எதிர்க்கும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சித்தார்த் மணி மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி அடுத்த 3 வாரங்களுக்கு பா.ஜனதா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடவடிக்கை கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com