உ.பி.யில் துணிகரம்: நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளர் மீது அண்டை வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தும் நபர்
தாக்குதல் நடத்தும் நபர்
Published on: 

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் சிவில் லைன் பகுதியில் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கும் அவரது அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில், அண்டை வீட்டுக்காரர் தனது இரு மகன்களுடன் நகைக்கடைக்காரரின் கடைக்கு நேற்று சென்றார்.  அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசியதுடன் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.  அவர்களை தடுப்பதற்காக பெண் ஒருவரும் வந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

நகைக்கடை உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தொடர்பான சி.சி.டி.வி. பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com