சீனா -லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி

சீனாவின் யுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
சாலை விபத்து
சாலை விபத்து
Published on

பெய்ஜிங்:

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் வென்ஷான் நகரில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  சாலையில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது திடீரென மோதிய அந்த லாரி கவிழ்ந்தது.

அப்போது, எதிர்த்திசையில் வந்த ஒரு சிறிய கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.  மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று லாரி ஓட்டுனர் லூவோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com