காஷ்மீர் என்கவுண்டரில் ஒரு ராணுவ வீரர் பலி - 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JKEncounter
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.