சத்தான காலை டிபன் திணை மிளகு பொங்கல்

அனைத்து தரப்பினரும் அடிக்கடி சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை அரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான காலை டிபன் திணை மிளகு பொங்கல்
Published on

திணை அரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
மிளகு -  2 டீஸ்பூன்,
உப்பு , நெய் -  தேவைக்கு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சை மிளகாய் -  2
சீரகம் - 2 டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் - சிறிதளவு,
முந்திரி - 10.

செய்முறை :

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

திணை அரிசி, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அரிசி, பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சத்தான காலை உணவு திணை மிளகு பொங்கல் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com