சத்தான கேழ்வரகு கருப்பட்டி பணியாரம்

சர்க்கரை நோயாளிகள் உணவில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து கொள்ளலாம். இன்று கேழ்வரகு கருப்பட்டி பணியாரம் செய்முறையை பார்க்கலாம்.
சத்தான கேழ்வரகு கருப்பட்டி பணியாரம்
Published on

கேழ்வரகு மாவு - ஒரு கப்,
ரவை - ஒரு கப்,
கருப்பட்டி, பால் - ஒரு கப்,
சோடா உப்பு - கால் டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை:

கருப்பட்டியை தூள் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாலில் கேழ்வரகு மாவு, ரவை, வடிகட்டிய கருப்பட்டி, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் வைக்கவும். (விரும்புகிறவர்கள் துருவிய தேங்காய் சேர்க்கலாம்).

அடுப்பில் அப்பக்குழியை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி, மாவை பணியாரங்களாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

சூப்பரான சத்தான கேழ்வரகு பணியாரம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com