குழந்தைகளுக்கு சத்தான ராகி லட்டு

கேழ்வரகில் உள்ள சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ராகி லட்டு
ராகி லட்டு
Published on

கேழ்வரகு மாவு - அரை கப்
தூளாக்கிய வெல்லம் - அரை கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
கருப்பு எள் - 1 டீஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு

சுக்கு தூள் - அரை டீஸ்பூன்

அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எள்ளை கொட்டி சிறு தீயில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்துக்கொள்ளவும்.

கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

வறுத்த மாவுடன் வெல்ல பாகு, உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை கொட்டி கிளறி இறக்கவும்.

ஆறியதும் லட்டாக பிடித்து சுவைக்கவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com