அப்ளாஸ்டிக் அனீமியா: எலும்பு மஜ்ஜை செயலிழக்கும்போது ஏற்படும் ஆபத்தான ரத்த நோய்!

அப்ளாஸ்டிக் அனீமியா என்பது சாதாரண இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகையிலிருந்து வேறுபட்ட ஒரு தீவிரமான நோயாகும்.
Aplastic Anaemia
Published on

நமது உடலில் ரத்த அணுக்களை உருவாக்குவதில் எலும்பு மஜ்ஜை முக்கியப் பங்கு வகிக்கிறது. சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவை எலும்பு மஜ்ஜையில்தான் உருவாகின்றன. இந்த எலும்பு மஜ்ஜை போதுமான அளவில் புதிய ரத்த அணுக்களை உருவாக்க முடியாத நிலையே Aplastic Anaemia எனப்படும்.

தமிழில் இதை அப்ளாஸ்டிக் அனீமியா அல்லது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு காரணமான ரத்தசோகை என்று குறிப்பிடலாம். இது அரிதானதாக இருந்தாலும், தீவிரமான ரத்தக் கோளாறாக மாறக்கூடியது.

அப்ளாஸ்டிக் அனீமியா என்றால் என்ன?

அப்ளாஸ்டிக் அனீமியா ஏற்படும்போது ரத்த அணுக்களை உருவாக்கும் stem cells பாதிக்கப்படுகின்றன. பல நோயாளிகளிடம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக இந்த செல்களைத் தாக்குவதால் நோய் உருவாகலாம். சிலரிடம் நோய்க்கான காரணத்தைத் தெளிவாகக் கண்டறிய முடியாது. சில மருந்துகள், chemotherapy மற்றும் radiation சிகிச்சை, குறிப்பிட்ட நச்சு வேதிப்பொருட்களுடன் தொடர்பு, சில வைரஸ் தொற்றுகள் மற்றும் அரிதான மரபியல் காரணிகளும் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ரத்த சிவப்பு அணுக்கள் குறைவு

இந்த நோயின் முக்கியமான தன்மை என்னவென்றால், சிவப்பு ரத்த அணுக்கள் மட்டுமல்லாமல் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும்.

red blood cells

இதனால் Pancytopenia எனப்படும் நிலை ஏற்படலாம். சிவப்பு ரத்த அணுக்கள் குறைவதால் உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்து, அதிக சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், வெளிறிய தோல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

றிகுறிகள்

வெள்ளை ரத்த அணுக்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்வது ஆபத்தானதாக இருக்கலாம். பிளேட்லெட்டுகள் குறைந்தால் ரத்தம் உறையும் திறன் பாதிக்கப்படும். இதனால் காரணமின்றி உடலில் நீலக்காயங்கள் தோன்றுதல், மூக்கில் அல்லது ஈறுகளில் ரத்தக்கசிவு, தோலில் சிறிய சிவப்பு அல்லது ஊதா நிறப் புள்ளிகள் போன்றவை ஏற்படலாம்.

சிகிச்சைகள்

அப்ளாஸ்டிக் அனீமியாவை கண்டறிய முதலில் Complete Blood Count (CBC) போன்ற ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டறியப்பட்டால், காரணத்தை அறிய Bone Marrow Aspiration மற்றும் Biopsy போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம். நோயின் தீவிரம் மற்றும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

சில நோயாளிகளுக்கு ரத்தம் அல்லது பிளேட்லெட் transfusion மூலம் தற்காலிகமாக ரத்த அணுக்களின் அளவை உயர்த்தலாம். நோய் எதிர்ப்பு அமைப்பு எலும்பு மஜ்ஜையைத் தாக்கும் நிலையில், immunosuppressive therapy பயன்படுத்தப்படலாம். தகுதியான சில நோயாளிகளுக்கு Blood and Bone Marrow Stem Cell Transplantation முக்கியமான சிகிச்சை வாய்ப்பாக இருக்கலாம். பொருத்தமான donor கிடைத்தால், இந்த சிகிச்சை சிலருக்கு நோயிலிருந்து நீண்டகால மீட்சிக்கான வாய்ப்பை வழங்கக்கூடும்.

பத்தான நிலை

அப்ளாஸ்டிக் அனீமியா சிகிச்சையின்றி தீவிரமடைந்தால் கடுமையான தொற்று, அதிகமான ரத்தக்கசிவு மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே தொடர்ந்து சோர்வு, அடிக்கடி தொற்று, காரணமின்றி ரத்தக்கசிவு அல்லது உடலில் அதிகமாக நீலக்காயங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

மொத்தத்தில், அப்ளாஸ்டிக் அனீமியா என்பது சாதாரண இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகையிலிருந்து வேறுபட்ட ஒரு தீவிரமான நோயாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து ரத்தநோய் நிபுணரின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்குவது நோயின் சிக்கல்களைத் தவிர்க்கவும், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com