போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தை சந்திக்க போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்களுக்கு 2018 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry
போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்
Published on

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பல ஆண்டுகளாக, பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

முன்னதாக, தனது ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதியென்றும், விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். புத்தாண்டை ஒட்டி அவரது அறிவிப்பு வெளியானதால், புத்தாண்டு கொண்டாட்டத்துடன், ரஜினியின் அரசியல் அறிவிப்பும் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இன்று 2018 புதிய ஆண்டு பிறந்ததையொட்டி ரஜினிகாந்த்தை சந்திக்க காலையிலேயே ரஜினி ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். இதையடுத்து வெளியே வந்த ரஜினிகாந்த், தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். #Rajinikanth #RajinikanthPoliticalEntry

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com