விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்

மேயாத மான் படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்
Published on

சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுமாகியிருக்கும் ப்ரியா பவானி ஷங்கருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக ப்ரியா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அருள்நிதி நடிப்பில் உருவாக இருக்கும் படம் ஒன்றிலும் ப்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com