

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மா இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் வந்துள்ள நக்மா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.
ஆனால், நக்மாவோ ரஜினியுடனான சந்திப்பில் எந்தவித அரசியலும் இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.