

`நிமிர்' படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலைமானே' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதற்கு முன்பாக தூண்டில், பிரியசகி உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் திகில் கலந்த த்ரில்லர் கதையில் நடிக்கிறார். உதயநிதி ஜோடியாக இந்த படத்தில் கயல் ஆனந்தி நடிக்கிறார்.
ஓஎஸ்டி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு உதயநிதி மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #UdhayanidhiStalin #KayalAnandhi