கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - பிரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகி வரும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம்.
கடைக்குட்டி சிங்கம்
Published on

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம்` கடைக்குட்டி சிங்கம்'.

இதில், கார்த்தி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

இசை - டி.இமான் ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, இயக்கம் - பாண்டிராஜ்.

விவசாயத்தை பெருமைபடுத்தும் படமாக இது உருவாகிறது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் பொங்கல் தினத்தையொட்டி வெளியானது. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார்த்தி உட்கார்ந்து இருக்கிறார். அதில் லுங்கி, தலைப்பாகை கட்டி  கிராமத்து இளைஞராக காட்சி அளிக்கிறார். 

மோட்டார் சைக்கிளின் முன்னால் `விவசாயி' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. `கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தின் தலைப்பின் கீழே `பயிர் செய்யவிரும்பு' என்ற துணைத்தலைப்பு இடம் பெற்றுள்ளது. எனவே, இது முழுக்க முழுக்க விவசாயத்தை கருவாக கொண்ட கதை என்பது உறுதியாகி உள்ளது. சூர்யா  தயாரிப்பில், அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இதனால் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com