கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம். #KadaikuttySingam #Karthi
கடைக்குட்டி சிங்கம்
Published on

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. 

முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இசை - டி.இமான், கலை - வீரசமர், படத்தொகுப்பு - ரூபன், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, எழுத்து, இயக்கம் - பாண்டிராஜ்.

“ இந்த படத்தில் கார்த்தி மாதம் ரூ.1½ லட்சம் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். என்ஜினீயர், டாக்டர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் முதல் பல இடங்களில் பெருமையாக எழுதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.

இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com