2.O படத்தின் முக்கிய அறிவிப்பு

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள ‘2.O’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #2PointO
2.O படத்தின் முக்கிய அறிவிப்பு
Published on

‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.O’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை சங்கர் இயக்கியுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 2 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் டீசரை வருகிற ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் நட்சத்திர கலைவிழாவின் போது வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் 6ம் தேதி மலேசியா செல்ல இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com