’டோரதி’ பேசாப் பொருளை பேச துணிந்திருக்கிறார்கள் - நடிகர் சூர்யா பாராட்டு!

கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்தின் நடிப்பு படத்திற்கு மேலும் உயிர்சேர்க்கிறது.
Dorothy
Published on: 

டோரதி திரைப்படம்

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவான 10வது திரைப்படம் டோரதி. இத்திரைப்ப்டத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக கீர்த்தி, சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். டோரதி திரைப்படம் சாதியக் கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கச் சமூகம் எவ்வாறு மாறுப்பட்ட பாலினத்தரின் அடையாளத்தை நசுக்குகிறது என்பதை மிகத் துணிச்சலாகவும் எதார்த்தமாகவும் பேசியுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை டோரதி திரைப்படம் பெற்றிருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

டோரதி பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்.இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதைத் திறம்படச்சொல்லியிருக்கிறார். கீர்த்தி ,சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது.

இசைஞானி இளையராஜாஅவர்களின் இசை மனதை நெகிழ வைக்கிறது.படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com