இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - காரணம் என்ன?

இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் யுவன் ஷங்கர் ராஜா - காரணம் என்ன?
Published on

25 ஆண்டுகளாக இசைத்துறையில் சிறப்பான பணியை செய்து வருகிறார் யுவன். இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ரு பல கமெண்டுஸ்கள் வந்தது.

இந்நிலையில் யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதற்கு எதிர்மறை கமெண்டுகள் காரணமா என குழம்பியுள்ள ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com