ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி நாளை ரீ ரிலீசாகும் தளபதி திரைப்படம்

1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தளபதி திரைப்படம் வெளியானது.ரீ ரிலீசாகும் தளபதி படத்திற்கான ரிசர்வேஷன் இன்று தொடங்கியுள்ளது.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை ஒட்டி நாளை ரீ ரிலீசாகும் தளபதி திரைப்படம்
Published on

1991 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி மற்றும் அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான தளபதி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.

இப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்றும் பல ரீல்ஸ்களில் நாம் பார்த்து வருகிறோம்.

இன்னும் நட்புக்கு ஒரு எடுத்துக் காட்டாக சூர்யா மற்றும் தேவா கதாப்பாத்திரங்களை குறிப்பதுண்டு. இந்நிலையில் இத்திரைப்படம் ரஜினிகாந்தின் 74- வது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் 4K டிஜிட்டல் வெர்ஷனில் நாளை (டிசம்பர் 12) ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன.

ரஜினி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com