D.I.S.C.O-ஆன தலைவர் 171- வெளியான புது போஸ்டர்

'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.படத்தின் ஃபர்ஸ்ட் லும் மற்றும் முன்னோட்டம் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.
D.I.S.C.O-ஆன தலைவர் 171- வெளியான புது போஸ்டர்
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார். மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லும் மற்றும் முன்னோட்டம் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இதையொட்டி படக்குழுவினர் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினிகாந்தின் கை மட்டும் கடிகாரங்களால் செய்த சங்கிலியை பிடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளார்.

அந்த டிஸ்கோ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று நாளை தான் தெரியும். படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com